பதிவு செய்த நாள்
30
ஜூலை
2023
10:07
பாலக்காடு: குருவாயூர் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது.
கேரளாவில் ஆண்டு தோறும் ஜூலையில், ஜீவதானம் எனும் பெயரில் குருவாயூர் கோவிலின், 41 யானைகளுக்கு ஒரு மாத புத்துர்ணவு முகாம் நடத்தப்படுகிறது. புன்னத்தூர் கோட்டை பகவதி கோவில் வளாகத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சுராணி, நடப்பாண்டுக்கான முகாமை துவக்கி வைத்தார். அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சவனப்பிராசம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் வழங்கும் இந்த முகாம் இன்று நிறைவுபெற்றது. நிறைவு விழாவை தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் கோபி கண்ணன் என்ற யானைக்கு மூலிகை உணவு அளித்து துவக்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்களான மனோஜ், ரவீந்திரன், நிர்வாகி மாயாதேவி, ராதா, துணை மேலாளர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டன.