சுருட்டபள்ளி பள்ளி கொண்டேஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2023 07:07
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டபள்ளியில் வீற்றிருக்கும் பள்ளி கொண்டேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நாளையொட்டி கோயில் முழுவதும் பக்தர்களின் சிவ நாம ஸ்வரங்கள் ஒலித்தது. ஸ்ரீ சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று பிரதோஷ தினத்தை ஒட்டி கோயில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமிக்கு வால்மீகேஸ்வர சுவாமிக்கும் ஏக(ஒரே) நேரத்தில் பிரதோஷ பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையில் நந்தீஸ்வரருக்கு பல்வேறு சுகந்த திரவியங்கள் ஆன பால், தயிர், சந்தனம் ,விபூதி ,குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமியை சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்தனர் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். இதில் சுருட்டு பள்ளி உட்பட அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.