காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு கிராம தேவதை திருவாத்தி அம்மனுக்கு 9ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த 28ல் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு திருவாத்தி அம்மன், அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மஹா தீபாராதனையும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு கும்பம் படையலிட்டு அம்மன் வர்ணிப்பும் நடந்தது.