பழநி: பழநி முருகன் கோயிலில் அம்மன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் அம்மன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மி நிகழ்ச்சி காலியாளர் பண்ணாடி ராஜா தலைமையில் நடைபெற்றது இதில் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மாலையில் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு வெளிப்பிரகாரத்தில் வள்ளி கும்மியாட்டம் ஆடினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளர் ஜெகன், கலைக்குழு தலைவர் நஞ்சுகுட்டி, தாரங்கமபாடி, செல்வராஜ், சக்திவேல், சேது ராஜ், குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.