அம்மன் கோயிலில் பனை ஓலை பட்டையில் கூழ் வழங்கல்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2023 08:08
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற அழகு நாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நடந்து வருகிறது. ஆடி வெள்ளிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பனை ஓலையில் இருந்து பட்டைப் பிடிக்கப்பட்டு, அவற்றில் சூடான கூழ் வார்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கோயில் பூஜகர் ஆனந்த் கூறியதாவது; இயற்கையுடன் இணைந்த பொருள்களுக்கு எப்போதும் மகத்துவம் உண்டு. கேப்பை மாவு, அரிசி மாவு, நாட்டு சக்கரை, சேமியா, முந்திரி, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை மாமாக்கி தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சப்படுகிறது. பூஜை நிறைவடைந்தவுடன் நூற்றுக்கணக்கான பனை ஓலை பட்டையில் பக்தர்களுக்கு கூழ் வார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் கப், எவர்சில்வர் பாத்திரம் ஆகிவற்றில் ஊற்றி குடிப்பதை விட பனை ஓலை பட்டையில் குடிக்கும் போது அதிக சுவையும், மணமும் இருப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். எனவே இயற்கையுடன் இணைந்த வழிபாடு எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.