திருச்செந்தூரில் ஆடிக்கிருத்திகை விழா; கடலில் நீராடி பக்தர்கள் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2023 03:08
திருச்செந்தூர்; முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி முருகனை வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. குரு ஸ்தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. சுவாமி சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கடலில் நீராடி காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது.