அவிநாசியில் ஆடிப்பொங்கல் விழா; ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2023 04:08
அவிநாசி; அவிநாசி வானியர் வீதியில் எழுந்தருளியுள்ள முனியப்ப சுவாமி, ஆதிபராசக்தி கோவிலில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது.
அவிநாசி வாணியர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி ஸ்ரீ ஆதிபராசக்தி கோவிலில் 121ம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமம், நந்தா தீபம் ஏற்றுதலுடன் தொடங்கிய விழாவானது, நேற்று சிறப்பு அலங்காரம், நந்தா தீப வழிபாடு ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். ஆடி பொங்கல் விழாவில், ஆதிபராசக்தி மற்றும் முனியப்ப சுவாமிக்கு மஹா அபிஷேகம், மலர் அலங்காரம் நடைபெற்றது. நாளை (வியாழன்) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.