காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நாளையொட்டி கோயில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரதோஷ தினத்தை ஒட்டி கோயில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமிக்கும் வால்மீகேஸ்வர சுவாமிக்கும் ஏக(ஒரே) நேரத்தில் பிரதோஷ பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையில் நந்தீஸ்வரருக்கு பல்வேறு சுகந்த திரவியங்கள் ஆன பால், தயிர், சந்தனம் ,விபூதி ,குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து சுவாமியை சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.