பதிவு செய்த நாள்
14
ஆக
2023
04:08
பழநி: பழநி முருகன் கோயில் மூலவர் திருமேனியை பாதுகாக்கும் வல்லுனர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பழநி கோயில் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் மூலவர் திருமேனியை பாதுகாக்கும் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை, சரவணம்பட்டி, கவுமாரமடம், குமரகுருபர சுவாமிகள், பழநி ஸ்தல அர்ச்சகர்கள் பிரதிநிதி கும்பேஸ்வர குருக்கள், பழநி ஆகம வல்லுனர் செல்வ சுப்பிரமணிய குருக்கள், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், பழநி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, பழநி கோவில் இணைஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். காலை 10:00 மணி அளவில் துவங்கிய கூட்டத்தில் மாலை 3:00 மணி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் கூறுகையில், "பழநி முருகன் திருமேனியை பாதுகாக்கும் போது பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில ஆய்வுகளை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஆய்வுக்கு வல்லுனர்கள் எவ்வளவு காலங்கள் தேவைப்படும் என்பதை கூற இயலாது. நீண்ட செயல்முறை கொண்ட ஆய்வுகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் " என்றார்.