பழநி: பழநி, அ.கலையம்புத்தூரில், அக்ரஹார பகுதியில் எழுந்தருளியுள்ள கல்யாணி அம்மன், கைலாசநாதர் திருக்கோயிலில் ஆடி லட்சார்ச்சனை நிறைவடைந்தது. பழநி, அ.கலையம்புத்தூரில், அக்ரஹார பகுதியில் எழுந்தருளியுள்ள கல்யாணி அம்மன், கைலாசநாதர் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை பூர்த்தியானது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கல்யாணி அம்மன், கைலாசநாதர், வள்ளி தெய்வானை முருகன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.