பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் 77 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மழைக் கோயில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ, செந்தில்குமார் துவங்கி வைத்தார். அவருடன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சித்தநாதன் அண்ட் சன்ஸ் பழனிவேல், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.