அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னூர் ஓதிமலை சாலையில் உள்ள பழமையான பெரிய அம்மன் கோவிலில் இன்று மதியம் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அங்காளம்மன் கோவிலில் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், கோவில்பாளையம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.