கருப்பண்ண சுவாமிக்கு 18 அடி உயர அரிவாள் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2023 05:08
ப.வேலுார்: ப.வேலுார் அருகே பிலிக்கல்பாளையத்தில், கருப்பண்ண சுவாமி கோவிலில், 18 அடி உயர அரிவாள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பிலிக்கல்பாளையத்தில் காவிரிக்கரையோரம் உள்ள கருப்பண்ண சுவாமி கோவிலில் நேற்று 18 அடி உயர இரும்பாலான, 750 கிலோ எடை கொண்ட அரிவாள் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். முன்னதாக கருப்பண்ண சுவாமிக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.