போடி: போடியில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான பயிற்சி மையத்தின் மூலம் ரக் ஷா பந்தன் ( புனித ராக்கி கயிறு அணிவிக்கும் விழா) விஸ்வகர்மா மண்டபத்தில் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். போடி பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூத்த ஆசிரியை பொற்கலை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை பிரம்மா குமாரிகள் ராஜயோக அமைப்பின் மூத்த ஆசிரியை ராதிகா கலந்து கொண்டு அனைவருக்கும் புனித ராக்கி கயிறு கட்டி, இனிப்புகள் வழங்கினார்.