பதிவு செய்த நாள்
28
ஆக
2023
11:08
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ உற்சவம் நேற்று நடைபெற்றது. உடுமலை பள்ளபாளையத்தில், உடுமலை திருப்பதி எனப்படும் ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், பவித்ரோத்ஸவ உற்சவம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு திருமஞ்சனம், சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமம் நடைபெற்றது. மாலை, 5:30 மணிக்கு, பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி, பஜனை நிகழ்ச்சி நடந்தது. இன்று, 28ம், தேதி காலை, 7:00 மணி முதல் சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.