திருப்பதியில் இன்று 4வது சிறுத்தை சிக்கியது; அச்சத்துடனே செல்லும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 10:08
திருப்பதி: ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய அண்மையில் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி இறந்தார். இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 28) திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4வது சிறுத்தை சிக்கியது. இதனால் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் அச்சத்துடனே செல்கின்றனர்.