ஆதித்யா எல்1 வெற்றிக்காக செங்காலம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2023 05:09
ஆந்திரா : நாளை விண்ணில் பாயும் ஆதித்யா எல் 1 வெற்றிக்காக ஆந்திரா செங்காலம்மன் கோயிலில் விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர்.
சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை செப்.,2ல் காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது. விண்ணில் பாய ஆதித்யா எல்-1-ன் தயார் நிலையில் உள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் இன்று(செப்.,1) துவங்கியது. நாளை பாயும் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி அடைய ஆந்திரா அருகே உள்ள செங்காலம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.