சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2023 06:09
சிதம்பரம்: சிதம்பரத்தில் இன்று நடந்த தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிதம்பரத்தின் பிரிசித்தி பெற்ற தில்லைகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் நடந்து வந்தது. அறநிலையத்துறை மற்றும் ஸ்தானிகர்கள் சார்பில் நடந்து வந்த பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி சிதம்பரம் நகராட்சி சார்பில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 1ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய கும்பாபிஷேக நாளான இன்று காலை 9 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகா தீபாரானை நடந்தது. பின்னர் மேலதாளத்துடன் புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகியது. தொடர்ந்து தில்லை காளி, தில்லையம்மன் மற்றும் ராஜ கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காலை 9.25 மணிக்கு அனைத்து கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.