பழநி: பழநி முருகன் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை நாளன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பழநி மலை அடிவாரம், கிரிவீதி சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பகலில் மலை கோயிலில் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். பழநி கோயில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கைடுகள் யாரும் நியமிக்கப்படவில்லை. போலி நபர்கள் சிலர் பக்தர்களிடம் எளிதாக மலைக்கோயில் சென்று தரிசனம் செய்யலாம் ஏமாற்றுகின்றனர். பக்தர்கள் ஏமாற வேண்டாம் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.