பதிவு செய்த நாள்
11
செப்
2023
05:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என் ரோடு அண்ணா நகர் தியாகி குமரன் காலனியில் ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்ம சக்தி, சுடலை மகாராஜா கோவில் அமைந்துள்ளது.
கோலின் 17 ம் ஆண்டு பொங்கல் விழா 13ம் தேதி முதல், தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, 13ம் தேதி காலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், கலச பூஜை, 5:30 மணிக்கு பொரி சாத்துதல், 14 ந் தேதி மாலை 6:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், மாலை 7:00 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி கொண்டு வருதல், இரவு 8:00 மணிக்கு திருகம்பம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 15 ந் தேதி காலை 7:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வருதல், மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, கணியான் அழைத்தல், இரவு 9:00 மணிக்கு சுடலை மகாராஜா, சத்ராதி முண்டக சுவாமி, ராஜ காளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், மிரம்மசக்தி ஆகிய தெய்வங்களுக்கு படையல் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெறுகிறது. 16 ந் தேதி மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து, வந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, வில்லுப்பாட்டு, இரவு 10:00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல், உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 17 ந் தேதி காலை 11:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.