நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் துளசி, ரோஜா, மல்லிகை, சம்மங்கி, உள்ளிட்ட பல்வேறு மாலைகளை செலுத்தி தரிசனம் செய்தனர்.