காஞ்சிபுரம், தேவி கருமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2023 01:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்காலிமேடு, காமராஜர் தெருவில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 45வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, நேற்று, காலை 10:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய தேவி கருமாரியம்மன் ப ல்வேறு வீதி வழியாக உலா வந்தார். மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மூலவர் அம்மன் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.