ஆற்றுகால் பகவதி கோவில் டிரஸ்டில் முதன் முதலாக பெண் தலைவர் நியமனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2023 06:09
திருவனந்தபுரம்: ஆற்றுக்கால் பகவதி கோவில் டிரஸ்ட் தலைவராக முதன் முதலாக பெண் ஒருவர் தேர்வாகி உள்ளார். கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில் திருவனந்தபுரம் அருகே அமைந் துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்கள் சேர்ந்து பொங்காலை வழிபாடு நடத்துவது உலக புகழ் பெற்ற தாகும். பாண்டிய மன்னரிடம் நீதி கேட்ட கண்ணகிதேவி வடக்கு நோக்கி செல்லும் வழியில் ஆற்றுக்காலில் பகவதி அம்மனாக காட்சி தருவதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆற்றுகால் பகவதி கோவில் டிரஸ்ட் சார்பில் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரஸ்டின் நிர்வாகிகள் தேர்வு நடந்த நிலையில் அதன் தலைவராக ஷோபா தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். தற்போது துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் அவர் வரும் 15ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா மின்சார வரியத்தில் அசிஸ் டெண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஷோபா கோவில் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்ட நிலையில் ஆற்றுகால் பகவதி கோவில் டிரஸ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த டிரஸ்டின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.