திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திருத்தலங்களில் 44வதாக திகழ்கிறது. கோயில் (நித்திய) தினசரி பூஜைகளில் ஏதேனும் தடைகள் அல்லது குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு பவித்ர உற்ஸவம் நடப்பது வழக்கம். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு வேள்விகள், விசேஷத் திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. கோயிலில் உள்ள அனைத்து சுவாமி சன்னதியில் மூலவர்களுக்கு பவித்திர மாலைகள் அணிவிக்கப்பட்டது. உள் மற்றும் வெளிப்பிரகார வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.