மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 05:09
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். இரவு 10.30மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் தாலாட்டு நடத்தினர். பக்தர்களும் அம்மன் பாடல்களை பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். இதில் கலெக்டர் பழனி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.