இன்று சம்பாசஷ்டி, சஷ்டி விரதம்; முருகா என்றாலே புண்ணியம் சேரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2023 11:09
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்குரிய விரதம். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். முருகனை வழிபட குடும்பத்தில் துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.