பதிவு செய்த நாள்
23
செப்
2023
05:09
செஞ்சி: திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை சென்ற பாதயாத்திரை குழுவினருக்கு செஞ்சியில் வரவேற்பளித்தனர்.
திண்டிவனம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திண்டிவனம் மரகதாம்பிகை உடனுரை திந்திரிணீஸ்வரர் கோவிலில் இருந்து 17 வது ஆண்டாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இன்று பாதயாத்திரை சென்றனர். சிவனடியார் தட்சணாமூர்த்தி, தலைமையில், நிர்வாகிகள் துரை, மூர்த்தி, பாலாஜி, கார்த்தி உள்ளிட்ட 300 சிவனடியார்கள் பாதயாத்திரையில் பங்கேற்றனர். இவர்களுக்கு செஞ்சியில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் விஷ்ணுராஜன், பா.ஜ., நகர தலைவர் தங்கராமு ஆகியோர் வரவேற்பலளித்தனர். நிர்வாகிகளுக்க சால்வை அணிவித்து, சிவனடியார்களுக்கு மதிய உணவு வழங்கினர். முன்னதாக சிறப்பு வழிபாடு நடந்தது.