புரட்டாசி சனி; பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2023 05:09
பெரியகுளம்: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முதல் வாரத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதத்துடன், நட்சத்திர தீபம் ஏற்றி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்சவர் கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் வாழைப்பழம் கனி அலங்காரத்தில் காத்திருத்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். . பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்,ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர் கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. தாமரைக்குளம் மலை மேல் வெங்கடாசலபதி கோயிலில் சுவாமி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். . லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.