Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பிரதோஷம்; சர்வம் சிவமயம்.. ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓதுவார்கள் நியமனத்தில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது; தருமபுரம் ஆதீனம் கண்டனம்
எழுத்தின் அளவு:
ஓதுவார்கள் நியமனத்தில் தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது; தருமபுரம் ஆதீனம் கண்டனம்

பதிவு செய்த நாள்

27 செப்
2023
10:09

மயிலாடுதுறை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற ஓதுவார்கள் நியமனத்தில் தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது என்று தருமபுரம் ஆதீன மடாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 183 கோயில்களில் 107 கோவில்களில்  ஓதுவார்கள் தற்போது பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று புதிதாக 5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்கள் பணி நியமன ஆணைகளை  அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். இதில் வழக்கமாக 5 ஆண்டுகள் தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை நியமிக்காமல் தமிழக அரசு இரண்டு ஆண்டு பயின்றவர்களை நியமித்துள்ளதாகவும், இது திருமுறைகள் ஓதும் ஓதுவார்களை தரம் தாழ்த்தும் நடைமுறை என்றும் தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்; தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பாக நேற்று ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் முழுநேரமாக முறையாக கற்று தேர்ந்தவர்கள் இல்லை என்பது ஊடகச் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. முறையாக ஐந்தாண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும்படி  செய்யப்பட்ட தவறான நியமனமாக இதனை கருதுகிறோம். இது தவறான முன்னுதாரணமாகவும் ஆகும். 80 ஆண்டுகாலமாக தேவார பாடசாலை நடத்திவருகிறோம், பெரும்பான்மையான ஓதுவார்கள் அனைவரும் இங்கு பயின்றவர்களே என்கிற தார்மீக அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவருகிறோம். 5 ஆண்டு தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை மட்டுமே ஓதுவாராக முன்னர் பணிநியமனம் செய்துவந்தனர் அவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. அதனை தளர்த்தி நான்காண்டு பல்கலைக்கழகத்திலும் மூன்றாண்டு இசைப்பள்ளியிலும் முழுநேரமாகப் பயின்றவர்களை நியமனம் செய்து வந்த நிலையில் தற்போது இன்னும் குறைபாடுடைய வகையில் மாதம் ஒருவகுப்பு ஈராண்டு 24 வகுப்பில் மட்டும் கலந்துகொண்டு பெற்ற சான்றிதழ் அங்கீகரிக்க பட்டமை முறையான தேர்ந்த நியமனமாயிராது. அது ஓதுவார் பணிக்கான பாடத்திட்டமும் கிடையாது.  தற்போது தேவாரபாட சாலைகள், பல்கலைக்கழகம், அரசு இசைப்பள்ளிகளில் முழுநேரமாக அர்பணிப்போடு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கும், இத்துறைக்கு மாணவர்கள் சேர்வதும் குறையுமாகையால் திருக்கோயிலில் ஓதுவார் பணிக்குரிய தரமான தகுதியான நியமனங்களையே செய்தல் வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம். மேலும் திருக்கோயில்களில் ஓதுவாமூர்த்தியாக பணி செய்பவர்களை கண்ணியதோடு நடத்தல் வேண்டும். ஓதுவார் பணியினை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தி புனிதமான திருமுறைகளை ஓதும் நன்நெறியுடையவர்களை தரம் தாழ்த்துவதும் மாற்றப்பட வேண்டிய நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அதியமான்கோட்டை; அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அயோத்தி ஸ்ரீராம் மடம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 39 லட்சம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றன.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த பைரவன் என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar