தேவிபட்டினம் முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2023 04:09
தேவிபட்டினம்: தேவிபட்டினம் வடக்கு நாடார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், விநாயகர் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோபூஜையும் நடைபெற்றன. பின்பு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகமும், தீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குழந்தைகளின் பரதநாட்டியமும், யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.