சோமன் (சந்திரன்) வழிபட்ட குஜராத் சோமநாதர் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2023 03:09
குஜராத் : குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலில் வழிபாடு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிபாடு செய்தார்.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் முதல் தலமும், அம்மனின் சக்திபீடங்களில் பிரபாஸா பீடமாக குஜராத் சோமநாதர் கோவில் விளங்குகிறது. சோமன் என்று சொல்லக்கூடிய சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றமையால் சோமநாதம் எனப் பெயர் உண்டாகியது. சோமநாதபுரம் உலகம் தோன்றிய காலம் முதலே சிறந்த தலமாக விளங்கியது. நமது நாட்டின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தலையாய தலம். இத்தகைய சிறப்பு மிக்க இங்கு இன்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் பிரார்த்தனை செய்தார். கோவில் வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் செய்து அவர் மூலவர் சோமநாதரை வழிபட்டார். பின்பு அவர் கூறியதாவது. அறிவியலில் சாதிக்க ஆண்டவன் அருள் தேவை. கடவுள் அருளால் சந்திரயான் சோதனை வெற்றி பெற்றது. இன்னும் பல சாதனைகள் புரிய ஆண்டவன் அருளாசி தேவை. முயற்சிகள் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார். தற்போது இந்திய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கும், மனிதர்களைக் கொண்ட விண்வெளி பயணத்திற்கும் தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை விண்வெளி முயற்சியில் இனைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.