பதிவு செய்த நாள்
29
செப்
2023
11:09
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில், செப்டம்பர் மாத வருவாயாக ரூ. 2 கோடியே 93 லட்சமும், 2 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.
திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய பணம், நகைகளும், உப கோயிலான சிவன் கோயில், நாசரேத் கோயில், கிருஷ்ணாபுரம் கோயில் உண்டியல்கள், கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த 22ம் தேதி எண்ணப்பட்டன. பின்னர், நேற்றுமுன்தினம் கோயில் நிரந்தர உண்டியல்கள், ஆவணித்திருவிழா தற்காலிக உண்டியல், மேலக்கோபுரம் திருப்பணி உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல்கள். கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர் செந்தில் முருகன் ஆகியோர், முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில், துாத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்துார் ஆய்வர் செந்தில்நாயகி, உழவாரபணி குழுவினர் கோயில் பணியாளர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் இருந்து ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது. மேலும், தங்கம் 2 கிலோ 100 கிராமும், வெள்ளி 19 கிலோவும், 424 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதின் மூலம் கிடைத்துள்ளது.