திருச்செந்துாரில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 12:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் பவுர்ணமி துவங்கி, நேற்று மதியம் வரை இருந்தது. பவுர்ணமி தினத்தன்று கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை சுவாமி தரிசனத்திற்கு கோயில் வளாகத்தில் குவிந்தனர். பவுர்ணமி தினத்தில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னே எப்போதும் இல்லாத வகையில் கோயில் பிரகாரத்தில் காணப்படும் வரிசை, நேற்று ஊருக்குள் சன்னதி தெரு வரை நீடித்தது. நகரில் திரும்பிய திசை எங்கும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்தது.