பதிவு செய்த நாள்
30
செப்
2023
11:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,15 முதல் 24 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இந்நாட்களில் தினமும் மாலை 6:00 மணி முதல் அம்மன் மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிேஷகம், அலங்காரமாகி விசேஷ பூஜைகள் இரவு 8:30 மணி வரை நடக்கும். இந்நேரத்தில் தேங்காய் உடைத்தல், அர்ச்சனை மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் உள்ள அலங்கார அம்மனுக்கு தான் நடக்கும். விழா நாட்களில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுபாட்டு போன்றவை நடக்கும். தினமும் அம்ம ன் அலங்காரம் அக்.,15 ல் ராஜராஜேஸ்வரி, 16 அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியது, 17 ஏகபாதமூர்த்தி, 18 கால்மாறி ஆடிய படலம், 19 தபசு காட்சி, 20 ஊஞ்சல், 21 சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, 22 மஹிஷாசுரமர்த்தினி, 23 சிவபூஜை அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளுவார்.