மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு 5 கருட சேவை நடந்தது.
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஐந்து கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. கருட சேவையில் யாகபேரர், ரங்கநாதர், வியூகசுந்தரராஜ பெருமாள், மதனகோபாலசுவாமி, வீரராகவபெருமாள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.