புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, பெரிய தேர்பவனி நடந்தது.தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், 58ம் ஆண்டுப் பெருவிழா, கடந்த 7ம் தேதி காலை திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் திருப்பலி, மாலையில் தேர் பவனி, திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரை நிகழ்ச்சி நடந்தன. சிறப்பு பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. காலையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலையில், பெரிய தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசிர் நடந்தது. சிறப்பு விருந்தினரான முதல்வர் ரங்கசாமி, தேர் பவனியைத் துவக்கி வைத்தார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., ஆலய பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.