பதிவு செய்த நாள்
05
அக்
2023
06:10
சின்னமனூர்: சின்னமார் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், விலங்கையா மற்றும் லட்சுமிநாராயண பெருமாள் கோயில்களில் பூஜை செய்து விவசாய சங்கத்தினர் காவல் பணியை துவக்கினார்கள்.
சின்னமனூர் வட்டாரத்தில் சின்னமனூர், பூலானந்தபுரம், கருங்கட்டான்குளம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், சீலையம்பட்டி போன்ற ஊர்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முதல் போகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் பகல் நேரங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்கவும், இரவு நேரங்களில் திருடு போய்விடாமல் இருக்கவும், பரவு காவல் சங்கம் தங்களின் காவல் பணியை நேற்று துவக்கியது. விவசாய சங்க தலைவர் ராஜா தலைமையில் விலங்கையா கோயில், லெட்சுமிநாராயண பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, காவல் பணியை துவக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், காவல் பணி மேற்கொள்பவர்கள் பங்கேற்றனர்.