Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ... கோபால்பட்டியில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி பூஜை
எழுத்தின் அளவு:
நத்தம் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி பூஜை

பதிவு செய்த நாள்

07 அக்
2023
04:10

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமை ஒட்டி கதிர் நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அம்மன், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்க அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆவிளிப்பட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் அபிராமி ஆலயத்தில் உள்ள கம்பத்து பெருமாளுக்கு சிறப்பு பூஜை, துளசி அர்ச்சனை, உலக நன்மை வேண்டி பாராயணம் செய்து பூஜைகள் நடந்தது. பூஜைகளை அறக்கட்டளை நிறுவனர் உதயகுமார் செய்து வைத்தார். இதைப் போலவே வேம்பார்பட்டி வேங்கடேச பெருமாள் கோவில், பெருமாள்கோவில்பட்டி தொழுவடி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளும், கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது . சாணார்பட்டி வி.டி.பட்டி பெட்டி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடந்தது. நத்தம் மதுக்காரம்பட்டி கோகுல கிருஷ்ணன் கோயில், நத்தம் கோவில்பட்டி சத்தியபாமா சமேத ராஜ வேணுகோபால சுவாமி கோயிலிலும் சிறப்பு பூஜைகள், செந்துறை அருகே ரெங்கையன் சேர்வைக்காரன்பட்டி மேலப்பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமை பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar