தீத்தாகிழவனூர் கோயிலில் ஆண்டு விழா; 48 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2023 04:10
வடமதுரை; அய்யலூர் தீத்தாகிழவனூர் கோவில் தோட்டம் நியாய விநாயகர், பேசும் பழனிஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன், ஆதி சிவன் கோயிலில் 58வது ஆண்டு விழா நடந்தது. யாக பூஜை, தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 48 வகை அபிஷேகங்கள், ஆராதனை, அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி ஊர்வலம் கடவூர் பிரிவு வரை சென்று அய்யலூர் கடை வீதி வழியே சன்னதி திரும்பியது. கோயில் நிர்வாகி வி.செந்தில்நாதன் மற்றும் விழா குழுவினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.