பதிவு செய்த நாள்
11
அக்
2023 
11:10
 
 பெருமாளின் அம்சமாக கருதப்படும், புதனுடைய வீடு கன்னி. கன்னி ராசியில் சூரியன் அமர்வது, புரட்டாசி மாதத்தில் தான். ஆகவே, இந்த மாதத்தில், பெருமாளுக்கு, பஜனை மற்றும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும். புதனுக்கு நட்பு கிரகம், சனி பகவான். அதனால் தான், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷம். தோஷமில்லாத கிழமை புதன். புதனின் சுபபலன் ஒருவருக்கு கிடைக்காவிட்டால் அவரது உழைப்பு வீணாகப் போய் விடும். நவக்கிரகங்களில் விவேகமும், பண்பும் நிறைந்தவர் புதன். கோயில்களில் நவகிரக சன்னதியில் புதன் கிழக்கு நோக்கியே காட்சி தருவார். அறிவுத்திறன், கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். புதனின் சுபபலன் கிடைத்தால் தொழில் மற்றும் வேலை இரண்டிலும் வெற்றிக் கொடியை நாட்டலாம். இன்று விநாயகரை வணங்கி தொடங்கும் செயல் வெற்றியாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நினைத்தது நடக்கும். இன்றைய நன்னாளில், புதன் பகவானையும், பெருமாளையும் வழிபட  ஆரோக்கியமும் அமைதியும் கிடைக்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். இன்று பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட பாவம் தீரும்.. நிம்மதி கிடைக்கும்.