சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை வழிபாடு; நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2023 11:10
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நாளை அக். 12 முதல் 15 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்துள்ளது.
இதனை முன்னிட்டு தினமும் காலை 6:00மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லவோ, இரவில் மலையில் தங்கவோ அனுமதி கிடையாது. சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்ப வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு அக். 26 முதல் 29 முடிய 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர். இம்மாதத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாட்டிற்கு 4 நாட்கள் நவராத்திரி திருவிழாவிற்கு 3 நாட்கள், ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு 4 நாட்கள் என மொத்தம் 11 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.