ஆர்ப்பரிக்கும் தாமிரபரணி ஆற்றில் மோட்சம் கிடைக்க பக்தர்கள் முன்னோர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 12:10
திருநெல்வேலி : மகாளய அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இன்று மகாளய அமாவாசையன்று பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் இந்த தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அதிகாலை 4 மணி அளவில் பாபநாசம் சிவன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல் குற்றாலம் மெயின் அருவி, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.