சென்னை ; நெடுங்குன்றம், புதுபெருங்களத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவில். இக்கோயிலில் இன்று 14ம் தேதி புரட்டாசி சனிக்கிழமைய முன்னிட்டு, பெருமாளின் வார்ஷிக ப்ரதிஷ்டாதின மஹோத்ஸவமும் 108 கலச திருமஞ்சனமும் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.