சென்னை; வடபழனி வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு விசேஷ அலங்காரம் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உத்ஸவர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை 15-10-2023 முதல் 23-10-2023 வரை நவராத்திரி உத்ஸவம் நடக்கிறது. விழாவில் காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனம், மாலை 5.15 மணிக்கு தாயார் உள் புறப்பாடு, சிறிய திருமடல் சேவை, ஊஞ்சல், தீபாராதனை, சாற்றுமறை, தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. மாலை 6.45 மணி முதல் 8.15 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.