பதிவு செய்த நாள்
16
அக்
2023
12:10
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், பரதநாட்டியத்துடன் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியவை என்பதால், லிங்க பைரவி தேவி, குங்கும அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், சூரிய குண்ட மண்டபத்தில், ஈஷா சமஸ்கிருதி பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பரதநாட்டியத்துடன், கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பமானது. இதில், ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் பரதநாட்டியம் பயின்ற ஜனப் பிரியா, பத்மக் ஷா, ரோஷினி ஆகிய மூன்று கலைஞர்களும், தங்களின் நடனத்தால் பார்வையாளர்களை கவர்ந்தனர். தியானலிங்கத்தின் முன் நடைபெற்ற, லிங்கபைரவி மஹா ஆரத்தி நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.