Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசுத்தமான நிலையில் கோவில் ... காளஹஸ்தியில் சந்திரகன்டா தேவி அலங்காரத்தில் அம்மன் உலா காளஹஸ்தியில் சந்திரகன்டா தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலையை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் கைது
எழுத்தின் அளவு:
சென்னிமலையை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் கைது

பதிவு செய்த நாள்

18 அக்
2023
05:10

சென்னிமலை; சென்னிமலை: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காட்டில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது. கடந்த செப். 17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் பேசினார். இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும் கிறிஸ்தவ முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் ஹிந்து முன்னணியினர் சென்னிமலை ஆண்டவர் குழு ஊர்மக்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் சென்னிமலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் இன்று கைது செய்யப்பட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar