Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுாரில் எதிராஜ ... ஜெய் ஸ்ரீராம் கூறியதில் என்ன தவறு.. பூஜை என்றால் சரஸ்வதி, லட்சுமி, சக்தி படங்கள் இருக்கும்; கவர்னர் தமிழிசை ஜெய் ஸ்ரீராம் கூறியதில் என்ன தவறு.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாறமேல்காவு அம்மன் முடிவுசெய்து சபரிமலைக்கு அனுப்பி உள்ளார்; புதிய மேல்சாந்தி மகேஷ் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பாறமேல்காவு அம்மன் முடிவுசெய்து சபரிமலைக்கு அனுப்பி உள்ளார்; புதிய மேல்சாந்தி மகேஷ் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

19 அக்
2023
01:10

சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகபுறம் மேல்சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 18ம் தேதி கோவில் நடைதிறக்கப்பட்டது. ஐயப்ப சுவாமி கோவிலிலும், மாளிகப்புறம் சன்னதிக்கும் ஆண்டுதோறும் மேல்சாந்திகள் நியமிப்பது வழக்கம். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகப்புறம் மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஐப்பசி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 


புதிய மேல்சாந்தி;  இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு உஷ பூஜையை தொடர்ந்து 8 மணி அளவில் மேல்சாந்திகள் தேர்வு நடைபெற்றது. இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன், செய்தி தொடர்பாளர் சுனில் அரம்மன்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் மேல்சாந்திக்கான இறுதி பட்டியலில் 17 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. அவர்களின் பெயர்களை தனித்தனி சீட்டுக்களில் எழுதி ஒரு வெள்ளிக்குடத்தில் போடப்பட்டது. சபரிமலை மேல்சாந்தி மற்றொரு வெள்ளிக்குடத்தில் 16 காலி சீட்டுகளும், சபரிமலை மேல்சாந்தி என்ற ஒருச்சீட்டும் என 17 சீட்டுக்கள் போடப்பட்டன. இந்த குடங்கள் ஐயப்ப சுவாமி சன்னதியில் பூஜிக்கப்பட்டன. பந்தளம் அரண்மனையை ச் சேர்ந்த குழந்தை வைதேஹ் வர்மா ஐயப்பன் கோவில் மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார். இந்த தேர்வில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் மேல்சாந்தியாக மூவாற்றுப்புழா ஏனாநல்லூரைச் சேர்ந்த பி.என்.மகேஷ் தேர்வாகி உள்ளார். இப்போது திருச்சூர் பாறமேல்காவு கோவிலில் உதவி மேல்சாந்தியாக உள்ளார். மாளிகப்புறம் மேல்சாந்தி மாளிகப்புறம் மேல்சாந்திக்கான இறுதி பட்டியலில் 12 பேர் இடம் பெற்றிருந்தனர். பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த நிருபமா ஜிவர்மா மாளிகப்புறம் மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார். குருவாயூரை அடுத்த பூங்கட்டுமனயைச்சேர்ந்த பி.ஜி.முரளி நம்பூதிரி மாளிகப்புறம் மேல்சாந்தியாக தேர்வாகி உள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக ஐதராபாத் சோமாஜிகுடா ஐயப்ப சுவாமி கோவிலில் மேல்சாந்தியாக உள்ளார் முரளி நம்பூதிரி. இவர்கள் இருவரும் கார்த்திகை மாதம் 1ம் தேதி தொடங்கும் மண்டலகால பூஜையின் போது இருமுடிக்கட்டி சன்னிதானம் சென்று மேல் சாந்தியாக பொறுப்பேற்க உள்ளனர். அதிலிருந்து ஓராண்டுக்கு இவர்கள்

மே ல்சாந்தியாக இருப்பார்கள். 


சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் மேல்சாந்தியாக தேர்வாகி உள்ள பி.என்.மகேஷ் கூறியதாவது:– அம்மன் அருளால்... சபரிமலை ஐயப்ப சுவாமி மற்றும் பாறமேல்காவு அம்மனின் அருளால் சபரிமலை மேல்சந்தியாக தேர்வாகி உள்ளேன். ஆலுவாவில் பூஜைகளுக்கான தந்த்ரா கல்விமுடித்தேன். டில்லியில் 14 ஆண்டுகளும், கோவையிலும் கோவில் பூஜைகள் செய்துவந்தேன். குருக்களின் அருளால் பாறமேல்காவு கோவிலில் ஓராண்டாக பணிபுரிந்து வருகிறேன். சபரிமலை மேல்சாந்தியாக வேண்டி 11 முறை விண்ணப்பித்தேன். 11வது முறையான இப்போது பாறமேல்காவு அம்மன் முடிவுசெய்து சபரிமலைக்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு ; உலக பிரசித்தி பெற்ற, 414வது மைசூரு தசரா விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. தசரா பண்டிகை மற்றும் அது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் ... மேலும்
 
temple news
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar