Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாறமேல்காவு அம்மன் முடிவுசெய்து ... அம்மா.. முத்தாரம்மா.. ; சங்கனூர் தசரா விழாவில் பக்தர்கள் பரவசம் அம்மா.. முத்தாரம்மா.. ; சங்கனூர் தசரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெய் ஸ்ரீராம் கூறியதில் என்ன தவறு.. பூஜை என்றால் சரஸ்வதி, லட்சுமி, சக்தி படங்கள் இருக்கும்; கவர்னர் தமிழிசை
எழுத்தின் அளவு:
ஜெய் ஸ்ரீராம் கூறியதில் என்ன தவறு.. பூஜை என்றால் சரஸ்வதி, லட்சுமி, சக்தி படங்கள் இருக்கும்; கவர்னர் தமிழிசை

பதிவு செய்த நாள்

19 அக்
2023
01:10

கோவை; கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பில் கூறியதாவது: திருப்பூர் மருத்துவ கல்லுாரியில் டீன், சரஸ்வதி, ஆயுத புஜைக்கு, எந்த மதம் சார்ந்த படங்களும் வைக்க கூடாது, ஒரு வேளை வைத்திருந்தால் பிரச்னை வருவதற்கு முன்னால் எடுத்து விட வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். படத்தை எடுத்தால் தான் பிரச்னை வரும். காலங்கலமாக பெயரே, சரஸ்வதி, ஆயுத பூஜை, சக்தி பூஜை என்று அர்த்தம். அரசு அதிகாரிகள் எல்லாம், இப்படி பேசினால் தான் அரசுக்கு பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளனர். கலெக்டர், அப்படி ஒரு சுற்றிக்கையே இல்லை என்று சொல்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பூஜை என்றால் நிச்சயமாக, சரஸ்வதி, லட்சுமி, சக்தி படங்கள் இருக்கும். ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கித்தள்ளுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்த பிரச்னையில் தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். உணர்வுகளை புண்படுத்தும் வகையில், செயல்படுவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஜெய் ஸ்ரீராம்; வெற்றியின் உணர்வு வரும்போது, ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுவதில் தவறு இல்லை. யாருக்கு என்ன உணர்வு தோன்றுகிறதோ அதை வெளிப்படுத்துவதில் தவறு இல்லை. பிற மதத்தினரும் தங்களது வெளிப்பாட்டினை வெளிப்படுத்த இது போன்ற கோஷம் போடுவதில் தவறு இல்லை; தடைகள் இல்லை. உற்சாகம் வரும்போது இறைவன் பெயரை சொல்லி கோஷம் போடுவதில் தவறில்லை. ஆதீனங்கள் சொல்வதை அரசு நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்; உண்மையை ஆராய வேண்டும். வேலுார், சென்னிமலையில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அவரவர் நம்பிக்கையை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. மற்றவர்கள் நம்பிக்கையில் புண்படுத்துவதும், உட்புகுதலும் தவறு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar