மேற்கு ஆப்பிரிக்காவில் விநாயகர் வழிபாடு; கானா நாட்டு மக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2023 04:10
புதியதாக எதைச் செய்தாலும் முதலில் விநாயகர் வழிபாடு செய்தே துவங்குவோம். மற்ற எல்லா தெய்வ வழிபாட்டைக் காட்டிலும் மிக எளிய முறையில் வழிபட ஏதுவானது கணபதி வழிபாடு. இவரை வழிபட்டால் எல்லா தெய்வங்களையும் அவ்வழிபாடு போய்ச் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கணபதி ஓம்கார ஸ்வரூபமானதால், அவருக்குச் செய்யும் வணக்கமும் ஸ்தோத்திரமும் பிரம்மத்தையே சேருவதால், விநாயக வணக்கம் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். இந்த விநாயகர் வழிபாடானது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதல்ல. இவ்வுலகில் இவரை மற்ற தேசங்களிலும் வழிபடுகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டு மக்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். முன்னாள் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சொல்ஹெய்ம் கானா நாட்டு மக்கள் விநாயகர் வழிபாடு செய்யும் படத்தை பகிர்ந்துள்ளது குறிபிடத்தக்கது.