Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேற்கு ஆப்பிரிக்காவில் விநாயகர் ... காவனக்கோட்டை வழுதநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் காவனக்கோட்டை வழுதநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தியின் திருவடியில் பங்காரு அடிகளார்; அருள்வாக்கு தரும் இடத்திலேயே நல்லடக்கம்
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தியின் திருவடியில் பங்காரு அடிகளார்; அருள்வாக்கு தரும் இடத்திலேயே நல்லடக்கம்

பதிவு செய்த நாள்

20 அக்
2023
05:10

மேல் மருவத்தூர்: மேல் மருவத்துார் அம்மா என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளார் நேற்று (அக்-19) ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார். அவரது உடல் சித்தர் முறைபடி கோயிலில் நல்லடக்கம் செய்யப்பட்டது

மேல் மருவத்துார் அம்மா என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளார் நேற்று (அக்-19) ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார். அவருக்கு வயது 82. அவரது உடலுக்கு ஓம்சக்தி பக்தர்கள் திரளாக நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளார் என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆன்மிக குரு. இவர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் அம்மா என்று அழைக்கப்பட்டு வந்தார்.

வாழ்க்கை வரலாறு; பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்பாள் என்ற மனைவியும் ஜி.பி அன்பழகன், ஜி.பி செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். அன்னை இங்கு சுயம்பு வடிவாக காட்சிதருகிறாள், பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சி இங்கு சிறப்பாகும். மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோயிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை மேலும் அந்த நிலத்தில் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவே தான் இந்தக் கோயிலை சித்தர்பீடம் என்று அழைத்தனர். பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோயிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோயிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாத விலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அது பற்றியும் பெரிதுபடுத்தி பேசவேண்டியதில்லை என்று கூறியவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி சக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நல்லடக்கம் ; பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி, அமர வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை அமர வைத்து வில்வம், உப்பு, ஐம்பொன், வேப்பிலை உள்ளிட்ட பொருட்களுடன், அவர் எப்போதும் அமர்ந்து அருள்வாக்கு தரும் இடமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கருவறையின் பின்புறம் உள்ள புற்று மண்டபத்தில் சித்தர் முறைப்படி அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். முன்னதாக மாலை 4:30 மணியளவில் பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை 5:15 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது. ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியில் பழமை வாய்ந்த பெரியம்மா கோயில் உள்ளது. கோயில் ... மேலும்
 
temple news
திருநகர்; திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் 27ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar